டென்னிஸ் உலகக்கிண்ணம் என கூறப்படும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில், இத்தாலி 47 ஆண்டுகளுக்கு பிறகு சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.
ஸ்பெயினின் மலகாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இத்தாலி அணியும் அவுஸ்ரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இதில் இத்தாலி அணி 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது.
ஒற்றையர் பிரிவு போட்டியில், மேட்டியோ அர்னால்டி 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்ஸி பாபிரினை வீழ்த்தி இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து இத்தாலியின் ஜென்னிக் சின்னர், 6-3 6-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியாவின் டி மினாரை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை உறுதிசெய்தார்.
இதன்மூலம், இதற்கு முன்பு 1976ஆம் ஆண்டு டேவிஸ் கிண்ணத்தை வென்ற இத்தாலி, இரண்டாவது முறையாக டேவிஸ் கிண்ணத்தை கைப்பற்றியது.
கடந்த ஆண்டு கனடாவிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்த அவுஸ்ரேலியா, இம்முறை 29ஆவது 29ஆவது முறையாக வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், இம்முறை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்தது.