பொலிஸ் சேவையில் சுமார் 20,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு வெற்றிடங்களுக்கு சுமார் 5,000 புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வருடத்தின் முதல் பாதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இது ஜனாதிபதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ,காவல் கண்காணிப்பாளர் சி. டி. விக்கிரமரத்ன கடந்த 24ஆம் திகதி ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.