மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ் நீதவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றிலும், வல்வெட்டித்துறை , பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றிலும், ஊர்காவற்துறை பொலிஸாரினால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் இன்றைய தினம் நடைபெற்ற விசாரணைகளை அடுத்து, அந்த அந்த நீதிமன்றங்களினால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை சுன்னாகம் , அச்சுவேலி மற்றும் தெல்லிப்பளை பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.