தென்னாபிரிக்கா அணிக்கெதிரான மூன்று வகை கிரிக்கெட் போட்டித் தொடர்களிலும் விளையாடவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்தநிலையில் இச்சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி விபரத்தை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடருக்கான இந்திய அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (அணித்தலைவர்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், ஹர்ஷ்தீப் சிங், முஹமட் சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா (அணித்தலைவர்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், கே.எல். ராகுல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முஹமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, பிரஸித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில், ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (அணித்தலைவர், சஞ்சு சாம்சன் (விக்கி), அக்ஸர் படேல், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான், ஹர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளுக்கிடையில், முதலாவதாக நடைபெறும் ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 10ஆம் திகதி டர்பனில் நடைபெறவுள்ளது.