தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப் பாதையை அமைப்பது தொடர்பிலான முயற்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
வடக்கை இணைத்து இந்தியா, இலங்கைக்கு இடையிலான எரிபொருள் குழாய் செயற்றிட்டம் விரைவில் ஆரம்பமாகும் என்றும் கோபால் பாக்லே கூறியுள்ளார்.
இதேவேளை தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவை குறித்தும் அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.
மேலும் அரசியல் தீர்வு விடயத்தில் கரிசனைகளைக் கொண்டுள்ள இந்தியா, 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்தும் வலியறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இம்மாதத்துடன் இந்திய உயர்ஸ்தானிகராக இலங்கையில் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யவுள்ள கோபால் பாக்லே வடக்கிற்கு மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.