மிக்ஜாங் புயலினால் சென்னையை சூழ்ந்த வெள்ளத்தில் பலர் சிக்கித்தவித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் நடிகர் விஷ்ணு விஷால் என்னை காப்பாற்றுங்கள். என் வீட்டை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளது .
சரியான கவரேஜ் கிடைக்கவில்லை மொட்டை மாடியில் ஒரு இட்டதில் வரும் கவரேஜை வைத்தே இதையும் பதிவிடுகிறேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் அமீர்கான் தனது தனிப்பட்ட வேலைகளுக்காக சென்னை வந்து வெள்ளத்தில் மாட்டிக்கொண்டதாக தகவல் பகிரப்பட்டது. இவர்கள் இருவரையும் தீயணைப்பு குழுவினர் மீட்டிருந்தனர்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் , இவர்களுக்கான போக்குவரத்து உதவியை நடிகர் அஜித் குமார் தனக்கு தெரிந்த நண்பர் மூலம் ஏற்படுத்தி கொடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதவிட்டு லவ் யூ அஜித் சேர் என தெரிவித்து மகிழ்ச்சியை வெறியிட்டுள்ளார்.


















