படுகொலை சதித்திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக நாலக டி சில்வா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி நாலக டி சில்வா கைது செய்யப்பட்டார்.