நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் சபாநாயகரிடம் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்லவினால் இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
முக்கியமான கேள்விகளுக்கு பதில் வழங்கப்படாமல் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
இருப்பினும் சபாநாயகரினால் எந்தவொரு பதிலும் வழங்கப்பபடாத நிலையில் சபை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் நிலையியற் கட்டளையின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியதுடன், அதற்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார்.