மிக்ஜம் புயல் காரணமாக தமிழ்நாடு உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்
புயலால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர் காயமடைந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள், மீட்புக்குழுவினர் அயராது உழைத்து வருகின்றனர் என்றும் அவர்களின் பணிகள் தொடரும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதேநேரம் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளை தமிழக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.