காசாவில் அமைந்துள்ள தங்குமிடங்கள் மற்றும் பாடசாலைகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.
ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் முழு சக்தியுடன் செயற்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
இந்நிலையில் எகிப்திற்குள் நுழைதே பாலஸ்தீனியர்களுக்கு சாத்தியமான வழி என்றும் தற்போதைய சூழ்நிலையில் இது மிகவும் கடினமானது என்றும் கூறப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களாக ரஃபா எல்லை மூடப்பட்டுள்ள அதேநேரம் முறையான ஆவணங்கள் இருப்பவர்கள் கூட எகிப்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முதலில் காஸாவின் மத்திய பகுதிக்கும் பின்னர் கான் யூனிஸ்க்கும் தற்போது ரஃபாவிற்கும் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.