மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று (6) காலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் காலை 7.45 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் வைத்து மன்னார் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளன.
மக்களினால் தொடர்ந்தும் முன் வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பேருந்துகளில் முறையான ஆவணங்கள் இருக்கவில்லை எனவும், பிரேக் லைட்கள் செயலிலந்து காணப்படுகின்றமையும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து 3 பேருந்துகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சோதனை நடவடிக்கைகளால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.