இந்தியாவில் ஏற்பட்ட மிக்ஜாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் போக்குவரத்து , வீட்டு பொருட்கள் , தொலைபேசி வசதி , இணைய வசதி , நீர் வசதி என அனைத்திற்கும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலையை அதிகரித்து விற்பதால் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஆவின்பாலின் விலையை 100 ரூபாய் வரை விற்பனையாளர்கள் அதிகரித்து விற்பதாக தெரியவந்துள்ளது.
சென்னை செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் தமிழ்நாட்டு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களே இந்த பிரச்சினைக்கு பெருமளவில் முகம் கொடுத்துள்ளனர். குறித்த சம்பவத்திற்கு பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்;படும் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் , ஏனைய நாட்களில் சென்னையில் 15 லீட்டர் பால் மட்டுமே தேவையானதாக காணப்படும் நிலையில் தற்போது அது 60 லீட்டர் வரை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது