பிரிட்டிஷ் கவுன்சில் நாடு முழுவதிலுமிருந்து IELTS பரீட்சைக்கு தோற்றி சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவர்களுக்கு, தமது தெரிவுக்குரிய பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசிலை வழங்கியுள்ளது.
நவம்பர் 27ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் நடைபெற்ற IELTS பரிசில் வழங்கும் நிகழ்வின் போதே இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.
அந்தவகையில் உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழி மூலம் கற்கைநெறிகள் நடைபெறும் பல்கலைக்கழகங்களில் தமது மாணவர்கள் கற்கைகளை தொடர்வதற்காக 5000 ஸ்ரேளிங் பவுண்களை பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கியுள்ளது.
இதனூடாக, இளம் மாணவர்களுக்கு தமது கல்விசார் கனவுகளை நனவாக்கிக் கொள்ள முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விபரம்
1ஆம் பரிசு – சுஹாஷி தல்கஸ்பிட்டிய
2ஆம் பரிசு – திலீப கமகே
2ஆம் பரிசு – ரவீஷ விக்ரமசிங்க
3ஆம் பரிசு – குஷாதினி மல்லவாரச்சி
3ஆம் பரிசு – மொஹமட் ரஸ்லான்
3ஆம் பரிசு – பென்ஜமின் தர்மரட்னம்
.