புற்றுநோயில் இருந்து தான் மீண்டுள்ளதாக டென்னிஸில் 18 முறை கிராண்ட் ஸ்லாம் சம்பியபட்டங்களை வென்ற அமெரிக்காவின் கிறிஸ் எவேர்ட் தெரிவித்துள்ளார்.
2022 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
புற்றுநோய் மீண்டுவர 90 சதவீதம் வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்ட போதும் 68 வயதான எவேர்ட் அதில் இருந்து மீண்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.
ஏழு பிரெஞ்ச் ஓபன், ஆறு யு.எஸ்.ஓபன் மற்றும் மூன்று விம்பிள்டனில் வெற்றிகள் உட்பட 18 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கிறிஸ் எவேர்ட் வென்றுள்ளார்.
இதேநேரம் 1970 ஆம் இருந்து தொடர்ந்து ஐந்தாண்டுக்கு உலகின் முதல்நிலை வீராங்கனையாக அவர் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.