பிரிதமர் ரிஷி சுனக்கின் முதன்மையான ருவாண்டா கொள்கையை நாளை வாக்கெடுப்பில் ஆதரிப்பதாக டோரி எம்.பிக்களின் வன் நேஷன் குழு அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் 106 எம்.பி.க்களை கொண்ட குழுவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் பிரித்தானிய அரசாங்கம் சட்டத்தையும் அதன் சர்வதேச கடமைகளையும் மீறினால் சபையில் இத்தகைய திருத்தங்களை எதிர்ப்போம் என்றும் அறிவித்துள்ளது.
இதேநேரம் அரசாங்கத்தின் ருவாண்டா சட்டமூலம் போதுமான அளவு செல்லவில்லை என்றும் மாற்றங்கள் அவசியம் என்றும் கன்சர்வேடிவ் கட்சியின் 40க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரிதமர் ரிஷி சுனக்கிடம் எடுத்துரைப்பதாகவும் அதன் பின்னர் உறுதியான முடிவை எடுப்போம் என்றும் அறிவித்துள்ளனர்.