ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அனட்டா மற்றும் மர்ஜ் நஜாவில் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் இஸ்ரேலியப் படைகளால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, மொத்தமாக, இந்த ஆண்டு மட்டும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான குறைந்தது 1,001 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறைந்தது 1,870 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.