14 அதிகரிப்புகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக, ‘பேங்க் ஒஃப் இங்கிலாந்து’ வட்டி வீதத்தை நிலையாக வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாணயக் கொள்கைக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வங்கி வீதம் தற்போது 5.25 சதவீதமாக உள்ளது. அடுத்த முடிவு வியாழன் மதியம் 12:00 மணிக்கு வெளியிடப்படும்.
அடமான வீதங்கள் உயர்வதைக் கண்ட வீட்டு உரிமையாளர்களுக்கு சிறிது நிவாரணம் தரக்கூடும். ஆனால் சேமிப்பாளர்கள் ஊக்கத்தை காண வாய்ப்பில்லை.
வங்கி வீதம் தற்போது 15 ஆண்டுகளில் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. டிசம்பர் 2021ஆம் ஆண்டு முதல் பணவீக்கத்தை அதன் இலக்கான 2 சதவீதத்துக்கு நெருக்கமாகக் கொண்டுவர வங்கி முயற்சிப்பதால், வீதங்கள் தொடர்ச்சியாக 14 முறை உயர்ந்துள்ளன.
தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின் படி, ஒக்டோபர் வரையிலான ஆண்டில் விலைகள் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளன. இது ஒரு மாதத்திற்கு முந்தைய அதிகரிப்பை விட மெதுவாக இருந்தது மற்றும் 2022 ஒக்டோபரில் 11.1 சதவீதமாக இருந்தது.