வட மாகாண ரீதியில் நெற் பயிரில் வேகமாக பரவி வரும் ‘வெண் முதுகு தாவரத்தத்தியின்’ தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில்,விசேட கூட்டமொன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய உதவி பணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணா, பிரதேச செயலாளர்கள், விவசாய திணைக்கள பிரதி நிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ” குறித்த நோய் தாக்கத்தினால் யாழ் மாவட்டத்தில் 5,000 ஹெக்டெயர் நிலப்பரப்பும், கிளிநொச்சி மாவட்டத்தில் 800 ஹெக்டெயர் நிலப்பரப்பும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 650 ஹெக்டெயர் நிலப்பரப்பும்,வவுனியா மாவட்டத்தில் 700 ஹெக்டெயர் நிலப் பரப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை மன்னார் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்ற போதும் குறித்த நோய் தாக்கம் குறித்து ஆராயப்பட்ட விடையங்களை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெரியப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.