கொழும்பில் மேற்கொள்ளப்படுகின்ற பொலிஸ் பதிவுகள் தொடர்பாக ஜனாதிபதியின் முடிவு அறியப்படும்வரை பொலிஸ் பதிவுப் படிவங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் பொலிஸ் பதிவு குறித்து பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடி உரிய பதிலளிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈ பொலிஸ் பதிவு முறைமை தொடர்பில் தனக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதுடன், வீடு வீடாக விபரங்களைத் திரட்டும் பொலிசாரின் பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு அறியப்படும்வரை, அரசியல் யாப்பில் இருக்கின்ற, ஆட்சி மொழி சட்டத்தை மீறுகின்ற இந்த பொலிஸ் பதிவு படிவங்களை நிராகரிக்கும்படி மக்களை கோருகிறேன்” என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.