”பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாகக் (PTA) கைது செய்யப்பட்ட வவுணதீவைச் சேர்ந்த உயர்தர மாணவனொருவனுக்கு நாளைய தினம் பிணை வழங்க படலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சாணக்கியனின் விசேட கோரிக்கைக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக கைதுசெய்யப்பட்ட மேலும் சிலருக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















