தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதாலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களை பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள், 3 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடிவருகின்றது.
இதில் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைய ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று அரம்பமாகிய நிலையில் இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி தனது முதலாவது இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களை குவித்துள்ளது.
அதில் இந்திய அணி சார்பாக கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க விராட் கோலி 38 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி கார்கீஸோ ரபாடா 17 ஓவர்களை வீசி 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 44 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் மேலும் 2 விக்கெட்கள் கைவசம் இருக்க இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று இந்திய அணி தொடரவுள்ளது.