புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் காணாமல் போன 242 பேரைக் கண்டுபிடிக்க தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடமபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்பு பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி 4,600 பேரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் நோட்டோ தீபகற்பத்தில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
இடிந்து விழுந்த வீடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என கருதப்படும் அதேநேரம் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இன்னும் மின்சாரம் மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவு காரணமாக வீதிகள் உடைந்துள்ளமையால் போக்குவரத்தில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.