ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் முன்னெடுத்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலாய் வவுனியாவுக்கு ஸ்னேறிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பல மணிநேரமாக பொலிஸாருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையே தர்க்கம் ஏற்பட்டிருந்த நிலையில் இருவர் கைது செய்ப்பட்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணோளி எடுத்த மீரா ஜாஸ்மின் என்ற பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.