அதிக மழை வீழ்ச்சியுடனான காலநிலை காரணமாக சூரிய ஒளி இல்லாததால் ரப்பர் தோட்டங்களில் பூஞ்சை நோய் பரவி வருவதாக ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படிஇ Pநளவடழவiழிளளை ஆiஉசழளிழசய எனப்படும் இந்த நோய், ரப்பர் மரத்தின் இலைகளில் ஏற்படும் பூஞ்சையால் ஏற்படுகிறது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
அதிக மழை மற்றும் சூரிய ஒளியின்மையினால் இந்த பூஞ்சை பரவுவதாகவும், தாழ்நில ஈர வலயத்தில் இறப்பர் செய்கையில் ஆரம்பிக்கப்பட்ட இந்நோய் தற்போது மொனராகலை போன்ற பிரதேசங்களில் பதிவாகி வருவதாகவும் இறப்பர் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
தற்போது, இந்நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ரப்பர் தோட்டங்களில் இந்நோய் காணப்பட்டால், உடனடியாக ரப்பர் தோட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகளைச் சந்தித்து தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் முகவர் நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.