ஹரக் கட்டா என்று அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலின் தலைவரான நந்துன் சிந்தக விக்ரமரத்னவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 06 சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் ஹரக் கட்டாவுடன் தொலைபேசி தொடர்புகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பிரகாரம் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று (12) பிற்பகல் குறித்த சந்தேக நபர்கள் வெலிகம மற்றும் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
24, 27, 32, 38, 39 மற்றும் 43 வயதுடைய வெலிகம, திக்வெல்ல மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.