வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவம் வெளியேறவேண்டும் என மாலைதீவின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி தொடர்பாக மாலைத் தீவைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர் தெரிவித்த கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதன் காரணமாக இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையே உரசல் போக்கு தொடரும் நிலையில் சீனாவுடன் இணைப்பை பலப்படுத்த மாலைத்தீவு ஜனாதிபதி பல்வேறு உத்திகளை முன்னெடுத்து வருகின்றார்.
அதன் அங்கமாக மாலைத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு ஜனாதிபதி முய்சு காலக்கெடு விதித்துள்ளார்.
அதன்படி இந்திய இராணுவ வீரர்கள் மார்ச் 15க்குள் அந்நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.