நாரம்மலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளார்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நாரம்மல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (19) பிற்பகல் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அவர் நாரம்மல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாரம்மல, தம்பலஸ்ஸ வலங்கடே பகுதியில் உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதியான 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹரச்சிமுல்லை – வத்தேகந்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.














