உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், சுமார் 30 ஜெனரேட்டர்களை இந்திய அரசு, உக்ரேனுக்கு 15-வது தொகுதி நிவாரண உதவியாக வழங்கியுள்ளது.
குறித்த நிவாரண உதவியினை உக்ரேனுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் குமார் ஜெயின், உக்ரேன் தரப்பு அதிகாரிகளிடம் அண்மையில் வழங்கி வைத்தார்.
இதன்போது இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்த உக்ரேன் தூதரக அதிகாரிகள், குறித்த ஜெனரேட்டர்களை உக்ரேனில் உள்ள கல்வி நிலையங்களில் நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உக்ரேன்-ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போர் காரணமாக, உக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள், போக்குவரத்து முனையங்கள் உள்ளிட்ட பிரதான அமைப்புக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.