சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்த சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (26) கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தியது.
வைத்திய நிபுணர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார சேவையாளர்களுக்கு பொருளாதார நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கைகளின் தொடரின் 3வது போராட்டம் இன்று இடம்பெற்றது.
எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பணியாளர்களின் கோரிக்கைக்கு இதுவரை அரசிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையின் போது நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு உட்பட அரசாங்கம் சகல பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.