நாட்டில் இன்றும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் த உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.