சபாநாயகர் இணைய பாதுகாப்பு சட்டத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்னர் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் சிலவற்றை அரசாங்கம் உள்வாங்காதமையால் சபாநாயகர் கட்சித்தலைவர் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி உயர்நீதிமன்றம் முன்வைத்த பரிந்துரைகளை இணைய பாதுகாப்பு சட்டம் உள்வாங்காதமையால் சபாநாயக அந்த சட்டத்தினை அங்கீகரிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, உரிய திருத்தங்களை முன்னெடுக்காமல் சபாநாயகர் தனது அனுமதியை வழங்கினால் நீதித்துறைக்கும் சட்டவாக்கத்திற்கும் இடையில் மோதல் ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.