பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் என்பத்தைந்து ரூபாவை நூற்ற பதினைந்து ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையில் பொருட்களின் விலை அதிகரிப்பு காணப்படுவதால் குறித்த தொகைக்குள் உணவை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதற்கு அமைய இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்த தொகை அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் அமைச்சில் இடம்பெற்றதுடன், இதில் நிதியமைச்சின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஒரு வேளை உணவுக்கு நூற்று பதினைந்து ரூபா வழங்கினால் போதும் எனவும், சந்தையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களின் விலைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அடுத்தவாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .
இந்நிலையில் , இதுவரை பத்து லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் பலனை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.