மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் ‘உரித்து திட்டத்தின்‘ முதற்கட்டமாக வழங்கப்படவுள்ள 10 ஆயிரம் காணி உறுதி பத்திரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்” “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைப்பதற்கான தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணல் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 5 ஆம் திக ரங்கிரி தம்புளை விளையாட்டரங்களில் நடைபெறவுள்ளது.
உரித்து பத்திரங்களை பெற்றுக் கொள்வோரின் உணவு தேவைகளுக்கு அவசியமான நிதி மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி நிகழ்வில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
“உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதோடு, அதற்காக வரவு செலவு திட்டத்திலும் 2 பில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.