குஜராத்தின் கட்ச் பகுதியில் இன்று (01) காலை 8.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
15 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் தேசிய மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், உயிர்ச்சேதம் அல்லது உடமைச் சேதங்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.