இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது இதில் தனது முதலாவது இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 410 ஓட்டங்களை பெற்று 212 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 80 ஓட்டங்களை குவிந்திருந்தது. இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கி இலங்கை அணி 100 ஓட்டங்களை கடந்தபோது நிஷான் மதுஷக 37 ஓட்டங்களோடு நவீட் சத்ரானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்துவந்த குஷால் மெண்டிஸ் 10 ஓட்டங்களோடு நிஜாத் மசூத்தின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது இலங்கை அணி 115 ஓட்டங்களை குவிந்திருந்தது.
இதேவேளை சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களோடு குவைசி அஹமட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடந்து ஜோடி சேர்ந்த அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டமும் நிதனமான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் மத்திய நேர இடைவேளையின் போது 177 ஓட்டங்களை குவித்தது.
அஞ்சலோ மத்தியூஸ் 29 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 15 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பந்துவீச்சில் ஆபிகானிஸ்தான் அணி சார்பாக நிஜாத் மசூத், குவைஸ் அஹமட் மற்றும் நவீத் சாதராண ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை சாய்த்தனர்.
மதிய இடைவேளையின் பின்னர் போட்டி ஆரம்பமாகிய நிலையில் அஞ்சலோ மத்தியூஸ் 101 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் சிறப்பிக்க விளையாடிய தினேஷ் சந்திமால் 84 பந்துகளில் அரைச்சம் கடந்தார். இருவர் இருவரும் 170 பந்துகளில் 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுத்தனர்.
தேநீர் இடைவேளையை தொடந்து 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக அஞ்சலோ மத்தியூஸ் சதமடித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெற்றுக்கொள்ளும் 16 ஆவது சதமாக பதிவாகியது. இதன்போது இலங்கை அணி 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதேவேளை சிறப்பிக்க விளையாடிய தினேஷ் சந்திமால் 168 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு 6 ஓட்டம் அடங்கலாக சதத்தை பதிவு செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெற்றுக்கொள்ளும் 15 ஆவது சதமாகும். இதன்போது இலங்கை அணி 364 ஓட்டங்களை பெற்றிருந்தது.
தொடந்து சிறப்பாக விளையாடிய தினேஷ் சந்திமால் 107 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார். இதேவேளை மத்தியூசும் சந்திமாலும் இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்ட 232 ஓட்டங்கள் இலங்கை அணியின் 4 ஆவது விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடந்து களமிறங்கிய அணித்தலைவர் தஞ்சய டி சில்வா எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ளாமல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்போது இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 380 ஓட்டங்களை குவித்திருந்தது.
இருப்பினும் 141 ஓட்டங்களை பெற்றிருந்த போது அஞ்சலோ மத்தியூஸ் கிட்விக்கெட் முறையில் அட்டமிழந்து வெளியேற இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக நவீத் சாதரான் மற்றும் குவைசி அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் நஜாத் மசூத் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.
இதேநேரம் தனது முதல் இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.