இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிற்ககாக விளையாடிவரும் ஆபிகானிஸ்தான் அணி எந்த விக்கெட் இழப்பும் இன்றி 97 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமான இன்று 241 ஓட்டங்கள் பின்னிலையோடு ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
இலங்கை அணி வீரரான சாமிக்க குணசேகர உபாதை காரணமாக போட்டியின் இடைநடுவே வெளியேறியமை காரணமாக வேகப்பந்து வீச்சாளர் கசும் ராஜித இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் அணியின் ஆரமப துடுப்பாட்ட வீரர்களின் நிதான துடுப்பாட்டம் காரணமாக மதியநேர இடைவேளையின் போது ஆப்கானிஸ்தான் அணி எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி 35 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பாக இப்ராஹிம் சத்ரான் 21 ஓட்டங்களையும் நூர் அலி சத்ரான் 12 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க மதியநேர இடைவேளையின் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
சிறப்பாக துடுப்பெடுத்தடிய ஆரம்ப துடுப்பாட்ட இப்ராஹிம் சத்ரான் 115 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக அரைசதம் கடந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 3 ஆவது அரைச்சதமாகும்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கையை தேநீர் இடைவேளை வரை 97 ஆக எடுத்துச்சென்றனர். இலங்கை அணியை விட 144 ஓட்டங்கள் பின்னிலையில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.