இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காம் நாள் ஆட்டத்தில் தனது 2 வது இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ஓட்டங்களை பெற்றது. இதனால் இலங்கைக்கு 56 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பமாகிய நிலையில் தொடந்து தனது இரண்டாவது இன்னிஸிற்காக ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது.
போட்டி ஆரம்பமாகி மூன்றாவது ஓவர் வீசப்பட்ட போது ரஹ்மத் ஷா 106 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக அரைச்சம் கடந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெற்றுக்கொள்ளும் 3 ஆவது அரைச்சதமாக பதிவாகியது.
இதனை தொடந்து இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 207 பந்துகளில் 100 ஓட்டங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டபோது கசும் ராஜித வீசிய பந்தில் ரஹ்மத் ஷா 57 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடந்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மற்றும் இப்ராஹிம் சத்ரனின் நிதான துடுப்பாட்டத்தை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து 230 ஓட்டங்களை பெற்றது.
இதனை தொடந்து முதல்பாதி ட்ரிங்ஸ் பிரேக்கை அடுத்து போட்டி ஆரம்பமான நிலையில் சிறப்பாக விளையாடிய இப்ராஹிம் சத்ரான் 259 பந்துகளில் 114 ஓட்டங்களை குவித்திருந்தபோது பிரபாத் ஜெயசூர்யவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடந்து பிரபாத் ஜெயசூர்யவின் பந்துவீச்சில் 37 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 18 ஓட்டங்களை பெற்றிருந்த அணித்தலைவர் ஹமதுல்லா ஷாகிதி ஆட்டமிழந்து வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி 246 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.
இதன்பின்னர் களமிறங்கிய விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இக்ரம் அலிகில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் குஷால் மெண்டிஸிடம் பிடிகொடுத்து ஒரு ஓட்டத்தோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதேவேளை தொடந்து களம்புகுந்த குவைசி அஹமட் பிரபாத் ஜெயசூர்யவின் பந்துவீச்சில் தஞ்சைய டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடந்து சியா ஊர் ரஹ்மான் எவ்வித ஓட்டங்களை பெறாமல் பிரபாத் ஜெயசூர்யவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் மதியநேர இடைவேளைக்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது. இதன்பின்னர் 12 மணிக்கு மதியநேர இடைவேளை அறிவிக்கப்பட்ட நிலையில் 1;45 ற்கு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
இதன்போது நவீத் சத்ரான் ஆட்டமிழந்து வெளியேறிய இரண்டாவது இன்னிங்சில் பிரபாத் ஜெயசூர்ய 42.3 ஓவர்களில் 91 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். இதில் 10 ஓட்டமற்ற ஓவர்களும் அடங்கும்.
இதனை தொடந்து 108.5 ஆவது பந்தில் ஆட்டமிழப்பு கோரிக்கை இலங்கை அணியால் விடுக்கப்பட்டது. இதனை அடுத்து மசூத் ஜமால் எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ளாமல் ஆட்டமிழந்து வெறியேறிய ஆப்கானிஸ்தான் அணி 284 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
தொடந்து ட்ரிங்ஸ் பிரேக்கில் ஆப்கான்சிதான் அணி 9 விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்களைப்பெற்று இலங்கை அணையை விட 55 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது அவ்வணி சார்பாக நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நசீர் ஜமால் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் மொஹமட் சலீம் 2 ஓட்டங்களை பெற்று ஆடுகளத்தில் இருந்தனர்.
இதனை அடுத்து 296 ஓட்டங்களுக்குள் ஆப்கான்சிதான் அணி சுருண்டது இதனால் இலங்கை அணிக்கு 56 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடவுள்ளது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்ய 47 ஓவர்களை வீசி 10 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 107 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களையும் அசித பெர்னாண்டோ 21.3 ஓவர்களை வீசி 63 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் ராஜித 20 ஓவர்களை வீசி 59 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.