கொலராடோவின் நகரமான டென்வரில் உள்ள குடியிருப்புப் பகுதியொன்றில் நள்ளிரவு விருந்தில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதன்போது இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்தனர் என டென்வர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு டென்வரின் கிரீன் வேலி ராஞ்ச் சுற்றுப்புறத்தில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (04-02-2024)அதிகாலை 1:23 மணியளவிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் 26 வயதுடைய இளைஞனும் ஒரு சிறுவனும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விருந்திற்கு அழைக்கப்படாத ஒரு கும்பலினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட நான்கு ஆண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது