செனகலில் ஜனாதிபதித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ‘மேக்கி சவுல்‘ கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார்.
இவ் அறிவிப்பினையடுத்து அந்நாட்டில் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்த பொலிஸார், பலரை கைது செய்துள்ளனர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதமர் அமினாதா டூரேவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.