இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டி இன்று வைபவ ரீதியாக ஆரம்பமானது.
இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக “கொமான்டோஸ் கப்” வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது.
11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது.
குறித்த ஆரம்ப நிகழ்வில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
தனது ஆரம்ப உரையில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கப்டன் சுலோசன மறப்பன குறிப்பிடுகையில்,
இலங்கை விமானப்படையின் 73ம் ஆண்டு நிறைவையொட்டி சமூக பாதுகாப்பினை இலக்காக கொண்டு இந்த போட்டியை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த போட்டியின் ஊடாக நட்புறவை வளர்ப்பதுடன், விமானப்படைக்கும் உங்களிற்கும் இடையில் நல்ல உறவை கட்டியெழுப்புவதுமே எமது இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அறிமுகம் இடப்பெற்றதுடன், குழுப்படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து முதலாவது போட்டி ஆரம்பமானது. குறித்த போட்டியில் கிளிநொச்சி வவுனியா அணிகள் மோதின. முதலாவது கோலை கிளிநொச்சி லீக் அணி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.