அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 547 பேரும், குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 116 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்புகளின் போது 175 கிராம் ஹெரோயின், 296 போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.