Ben Holdings குழுமத்தின் கீழ் “அபே ஜனஹண்ட பப்ளிகேஷன்ஸ்” என்ற அச்சு ஊடக அமையத்தை ஆரம்பித்து மொனரா என்ற சிங்கள மொழி வார இறுதி பத்திரிக்கையை நாளை முதல் வெளியிடப்படவுள்ளது.
குரலற்ற மக்களுக்காக குரல் கொடுப்பது! செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் ஏற்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தேசிய பத்திரிகையான “மொனரா” 6 பிரிவுகளுடன் 76 பக்கங்களை கொண்டுள்ளதுடன் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுளள்ளது.
அதற்கமைய நாளை முதல் கொழும்பு, கம்பஹா, நீர்கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மொனரா பத்திரிக்கையை பெற்றுக்கொள்ள முடியும்.