அபுதாபியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்துகோயிலானது இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்துவைக்கப்படவுள்ளது.
700 கோடி இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட குறித்த கோயிலில் கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கேட்போர் கூட்டங்கள், உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 5000 பேர் வரை ஒரே நேரத்தில் நிகழ்ச்சிகளைப் பார்வையிடக் கூடியவாறு 2 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்பட்டுள்ளதோடு, அதில் மொத்தமாக 1,200 கார்கள் மற்றும் 30 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.