”காஸாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ராஃபா நகரம் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினால் பேரழிவு ஏற்படக்கூடும்” என ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான உதவிகள் தொடர்பான பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு செல்ல முடியாத, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் ராஃபாவில் சிக்கியுள்ளனர் எனவும், அவர்கள் போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி தவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.