நாடு முழுவதும் நானூற்று நாற்பத்தொரு வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களில் 51% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் தலைவர் எம். பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில்” வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் யானை –மனித மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வறண்ட பிரதேசங்களில் யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளின் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.