தமிழகத்தின் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடல் மாசுபாடு மற்றும் கடல் நீரின் தரம் குறைவடைந்துள்ளதன் காரணமாக, வழமையாக வருகை தரும் பறவைகளின் எண்ணிக்கையை விட இம்முறை மிகவும் குறைந்தளவான பிளமிங்கோ பறவைகளே வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டு 40 நாட்களுக்குப் பின்னரே தனுஷ்கோடி பகுதிக்கு பிளமிங்கோ பறவைகள் வருகை தந்துள்ளன எனவும், தொடக்கத்தில் 400 பறவைகள் வந்த நிலையில் தற்போது 4,000 உட்பட்ட பறவைகள் குஜராத் மாநிலத்தில் இருந்து தனுஷ்கோடி பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.