ஆடவருக்கான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நமீபியாவின் ஜோன் நிகோல் லொஃப்டி-ஈடன் படைத்துள்ளார்.
நேபாளத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் நேபாளம் அணியுடனான முதல் போட்டியின் போது அவர் இந்த சாதனையை படைத்தார்.
33 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் சதம் அடித்த அவர் நேபாளத்தின் குஷால் மல்லாவின் சாதனையை ஒரு பந்தில் தகர்த்தெறிந்தார்.
2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிரான் போட்டியின் போது நேபாளம் அணி சார்பாக மல்லா குறித்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 4 விக்கெட்களை மாத்திரமே இழந்து 206 ஓட்டங்களை குவித்தது.
இதனை அடுத்து கடினமான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19வது ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்று 20 ஓட்டங்களினால் போராடி தோற்றது.