உக்ரேனுடனானபோரில் ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்களை ரஷ்யா தற்போது பயன்படுத்துகிறது. உக்ரேன் இராணுவ தளங்களை ரஷ்யாவின் ஆயுதங்கள் மிகத் துல்லியமாக தாக்கி வருகின்றன. குறிப்பாக Avangard மூலோபாய ஹைப்பர்சோனிக் கிளைடர்கள் மற்றும் பெரிஸ்வெல் லேசர் அமைப்புகள் ஏற்கனவே போரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நாம் பயன்படுத்துவோம்” இவ்வாறு புடின் தெரிவித்துள்ளார்.