யாழ்.சாவகச்சேரி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த பரணிதரன் என்ற குறித்த மாணவன் சாவக்சேரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


















