காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் விரைவில் வடக்குக் காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
வடக்கு காசாவை உதவிகள் சென்றடைய விடாமல் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து தடுத்து வருவதால் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் வடக்கு காசாவுக்கு உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்திருப்பதாகவும் அதனை ஐநாவால் கையாள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காசாவுக்கான உதவிகள் தயார் நிலையில் எல்லையில் காத்திருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.